இலங்கையில் கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் திட்டத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

இலங்கையில் கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் திட்டத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

அஸ்டிராஸெனகா தடுப்பூசியின் முதலாம் டோஸ் இனை பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் ஆக மொடர்னா மற்றும் ஃபைசர் தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதற்கு சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நடவடிக்கைக்கு சுகாதார அமைச்சின் தொற்று நோய்கள் குறித்த ஆலோசனைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமான தெரிவித்தார்.

அதன்படி, அஸ்டிராஸெனகா தடுப்பூசியை முதல் டோஸாகப் பெற்ற அனைவருக்கும் மொடர்னா அல்லது ஃபைசர் தடுப்பூசியை இரண்டாவது டோஸ் ஆக வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மொடர்னா தடுப்பூசியானது இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்காக ஒப்புதல் வழங்கப்பட்டது. இரு வாரங்களில் ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளை இலங்கைக்கு கிடைக்கப்பெற உள்ளது.

இலங்கையில் இன்னும் பயன்பாட்டில் இல்லாத மேலும் மூன்று தடுப்பூசி வகைகளை இலங்கை அரசு பெற உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமான தெரிவித்தார்.

இப்புதிய வகைகளில் ஃபைசர் மற்றும் மொடர்னா ஆகிய தடுப்பூசிகளும் அடங்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். இலங்கை அரசானது சினோவாக் தடுப்பூசியையும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று தடுப்பூசிகளும் இரண்டு வாரங்களில் இலங்கைக்கு வரவுள்ளதாக பேராசிரியர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.