இலங்கையில் தற்போது போன்று கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துச் சென்றால் 100 நாட்களில் 10 இலட்சம் தொற்றாளர்கள் உருவாக வாய்ப்பு அதிகளவில் காணப்படுவதாக சுகாதார பிரிவினர் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
கொழும்பில் நேற்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
கொரோனா தொற்று ஏற்பட்ட ஒரு நபர் இருவருக்கு அதனை பரப்பினால் ஒவ்வொரு ஐந்து நாட்களுக்கும் இரட்டிப்பு மடங்கான கொரோனா தொற்றாளர்கள் உருவாகக்கூடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதனால் கொரோனா தொற்று ஏற்பட்டவர் அதனை மற்றைய நபர்களுக்கு பரப்பாமல் இருப்பதும் கொரோனா தொற்று உள்ளவர்களிடம் இருந்து அதனை பெற்றுக் கொள்ளாமல் பாதுகாப்பாக இருப்பதும் அனைவரினதும் பொறுப்பு என அவர் சுட்டிக்காட்டினார். (யாழ் நியூஸ்)