ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை உறுதி செய்தது அமெரிக்கா!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை உறுதி செய்தது அமெரிக்கா!

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி என்பதை அமெரிக்காவின் எப்பிஐ நிறுவனமும் உறுதி செய்துள்ளதாகவும் தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நான்கு மாலைதீவு பிரஜைகள் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று (19) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஞாயிறு தாக்குதல் குறித்து 32 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ள குறைகளை நிவர்த்தி செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

பொலிஸ் விசாரணை மற்றும் அமெரிக்க விசாரணை ஊடாகவும் பிரதான சூத்திரதாரி நவுபர் மவுலவி என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். ஐஎஸ் கொள்கைகளை பரப்புதல், பயிற்சி வழங்குதல், நுவரெலியா, ஹம்பாந்தோட்டை பயிற்சி நிலையங்களை கண்காணித்தல் போன்றவற்றை நௌபர் மௌலவி​ மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் இந்த தாக்குதலில் பின்னணியில் சூழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.