அனைவரும் வாசித்து உணர வேண்டும்: COVID விடயத்தில் அறியாமையில் மார்கத்தை அனுகும் சில சகோதரர்கள்!

அனைவரும் வாசித்து உணர வேண்டும்: COVID விடயத்தில் அறியாமையில் மார்கத்தை அனுகும் சில சகோதரர்கள்!

நாட்டில் ஏற்பட்டுள் அபாயகரமான நிலைமயை சில சகோதரர்கள். இஸ்லாத்தின் பெயரால் மடத்தனமாக அணுகுவதை பார்கும் போது கவலையாக உள்ளது.

கடந்த காலங்களில் ஒரு சில பள்ளிவாசல்களில் நம் மக்களும் பள்ளிவாசல் நிர்வாகிகளும் நடந்து கொண்ட விதம் குறித்து சில வேலைகளில் நிர்வாகிகளிம் சண்டையிட வேண்டி ஏற்பட்டது. நாட்டில் அபாயகரமான நிலைமை இருக்கும் நிலையில், சிலர் கவனையீணமா நடந்து விதம் மிக மிக கவலைக்குறியது.

இதனால் சில சகோதரர்கள் பள்ளிவாசலுகுச் செல்வதையும் நிறுத்திக் கொண்டார்.

அதாவது அல்லாஹ்வின் நாட்டப்படியே எல்லாமே நடக்கும் என்ற நோக்கோடு ஏனோ தானோ என அவர்கள் பாட்டில் செயற்பட்டனர். இது இவர்களின் அறியாமையின் வெளிப்பாடா ? அல்லது அதிபிரசங்கித்தனத்தின் செயற்பாடா எனத் தெரியவில்லை.

அதாவது இஸ்லாமியர் களாகிய எங்களுக்கு அல்லாவும் அவன் விதியும், தீர்பும் இறுதியானது என்பதில் இரணாடாம் கருத்திற்கு இடமில்லை. இதை நம்பாதவான் ஒரு முஸ்லிமும் இல்லை.

ஆனால் அந்த அல்லாஹ்வின் தீர்பையும் முடிவையும் அவன் சொன்ன படியே அனுக வேண்டும். ஒரு விடயத்தில் அவன் எழுதியது நடக்கும் என பராமுகமாய் இருந்து வழியே போய் ஆபத்தில் மாட்டிக் கொள்வது இஸ்லாம் அல்ல.

நமக்கு அல்லாஹ் தந்துள்ள உயர்வான அறிவைக் கொண்டு, நமது ஆத்மா சக்திக்கு உற்பட்ட வகையில் அந்த ஆபத்தில் இருந்து நாம் தப்பிக்க முயற்சிக்க வேண்டும். நமது ஆத்மா சக்தியையும் மீறி ஆபத்து நம்மை அடையுமாக இருந்தால் அதை அல்லாஹ்வின் முடிவு, விதி, எழுதப்பட்டது என அதை

ஏற்று நிம்மதி கொள்வதே மார்கத்தின் வழிமுறை.

ஒருவருக்கு சுகயீனம் ஏற்படும் போது அவருக்கு அவ்வேலையில் வைத்தியரின் ஆலேசனையே வழி முறை. அவர் வைதியர் சொல்வதைக் கேற்காமல் வைத்தியரின் அலோசனை யைக் கேளாமல் அல்லாஹ் வைத்த படி என் விதிப்படி நடக்கும்

என அதிபிரசங்கித்தனமாக நம்பிக்கை கொள்வது மடமையின் உச்ச கட்டமாகும். இவாறான வழி முறையை மார்க்கம் தடை செய்வதோடு, இவ்வாறான முடிவுகளுக்கு வித்தியாசமா மார்கத்தின் தீர்ப்புகளும் மார்க அறிஞர்களின் தீர்ப்புகளும் உள்ளன.

எனவே இதன் அடிப்படையில், தற்போது உள்ள கொரோனா நிலவரத்தில் மாஸ்க் அணியாமல், சுகாதார நடைமுறைகளை கைக் கொள்ளாமல், இது சம்பந்தமான வைத்தியத்துறையின், அறிவியல் துறையின் ஆலோசனையை பின்பற்றாமல், அல்லாஹ் வைத்தது நடக்கும் என வாதாடுவது, இதைவிட மடத்தனம் உலகில் இருக்க முடியாது என்றே கூற வேண்டும்.

நாமும் எமது ஆத்மா சக்திக்கு உற்பட்ட வகையில் கவணமாக நடந்து சகாதகர வழிமுறைகளை கையாண்டு, அதையும் மீறி ஒருவருக்கு தொற்று ஏற்படுமாயின் அதுவே அல்லாஹ்வின் நியதி.

எமது குடும்பத்தில் அல்லது உறவுகளுக்கு அல்லது வயதான தாய் தந்தையர்களுக்கு சகயீனம் ஏற்படும் இடத்து வைத்தியரை நாடி ஆலோசனை பெறாமல், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அல்லாஹ் வைத்தபடி அவன் எழுதியபடி நடக்கும் என்று இருந்து விட்டால் அதை எவ்வாறு அழைப்பது . 

இதே வேலை ஜனாஸாக்களின் அதிகரிப்பை நோக்கும் போது முஸ்லிம் சமூகம் கவனையீணமாக செயற்பட்டதின் பிதிபலனை அறிய முடிகின்றது. இன்று பல வைத்திய அனைத்து ஏனைய விதமான சிகிச்சைக்காக நோயாளிகளை அனுமதிப்பது மறுக்கப்படுகிறது.

அதாவது முதல் நூறு ஜனாஸாக்களை அடக்கம் செய்ய எடுக்ப்பட்ட காலம் 56 நாற்கள் இரண்டாவது நூறு ஜனாஸாக்களை அடக்கம் செய்ய 19 நாற்களும் மூன்றவது 122 ஜனாஸாக்களை அடக்கம் செய்ய வெறும் 9 நாற்களே எடுத்துள்ளன. இது நம் முஸ்லிம் சமூகம் கடந்த காலங்களில் கவனையீனமாக செயற்பட்டதின் பிரதிபலிப்பை உணர்த்துகிறது.

இதன் பிறகாவது விழிப்படைவேம்.

29.05 2021 உத்தியோக பூர்வமாக அறிவிகப்பட்ட 42 மரணங்களில் 21 நம் ஜனாஸாக்களே 

மடமையா ?

அறியாத்தனமா ?

அதிபிரசங்கித்தனமா ?


இதை பதிவிடுவதின் நோக்கம் யாரையும் குறை சொல்வதோ மன நோவினை செய்து பாவத்தை சுமப்பதோ அல்ல.

பொருநாள் நேரங்களில் புரக்கோட்டை உற்பட இன்னும் சில இடங்களில் முஸ்லிம் மக்கள் நடந்து கொண்ட விதம் குறித்து பல பதிவுகளை social மீடியாக்களில் பல விழிப்புணர்வுகள் வெளிவந்த போதிலும் மக்கள் பராமுகமாகவே இருந்தனர்.

நிலைமை எங்கே போய் முடியப் போகுதோ. அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும்.

நம் சமூகம் விழிப்படைய வேண்டும்.

எனவே நம் அனைவரையும் அல்லாஹ் சரியான பாதையில் நடத்துவானாக.

நம் அனைவரையும் அல்லாஹ் காப்பாற்றுவானாக.

( பேருவலை ஹில்மி)

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.