கடந்த வாரம் அமல்படுத்தப்பட்டதைப் போன்றே இந்த வார இறுதியிலும் நாடளாவிய பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று இராணுவத்தளபதி தெரிவித்தார்.
இப்பயணத் தடையானது எதிர்வரும் மே 21 ஆம் திகதி இரவு 11 மணிக்கு முதல் மே 25 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை தொடரும் என்றும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
மே 25 ஆம் திகதி இரவு 11 மணி முதல் மே 28 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை இப்பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் மறுசீரமைக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், தினமும் இரவு 11 மணி முதல் காலை 04 மணி வரை இரவு நேர பயணக் கட்டுப்பாடானது, தொடர்ந்து மே 31 வரை அமுலில் இருக்கும் என்றும் தெரிவித்தார்.