சுகாதார வழிமுறையை பின்பற்றி பயணித்து 1 கோடி பெறுமதியான போதைப் பொருள் கடத்தல்!

சுகாதார வழிமுறையை பின்பற்றி பயணித்து 1 கோடி பெறுமதியான போதைப் பொருள் கடத்தல்!


கொழும்பு - முகத்துவாரம் போதிய சந்தி பகுதியில் போதைப்பொருட்களுடன் பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 250 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள், 500 கிராம் ஹெரோயின் மற்றும் 1 கிலோ கிராம் ஹேஷ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி சுமார் 10 மில்லியன் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பெண் அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையிலேயே இவ்வாறு போதைப்பொருட்களுடன் பயணித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

-தமிழன்

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.