ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சதிகாரர்கள் தற்போதைய அரசாங்கத்தில் - தகவல் வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சதிகாரர்கள் தற்போதைய அரசாங்கத்தில் - தகவல் வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சதிகாரர்கள் இந்த அரசாங்கத்தில் இருப்பவர்களாகும். இதனை பகிரங்கமாக எங்களுக்கு தெரிவிக்க முடியும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றம் இன்று (19) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது.

பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கை பூரணப்படுத்தப்படாமல் இருப்பது தொடர்பாக சட்டமா அதிபரால் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்து தொடர்பாக விளக்கமளிக்கும் கூற்றொன்றை சபையில் தெரிவித்தார்.

இதன்போது அவர், சஹ்ரானை கைதுசெய்யுமாறு அரச புலனாய்வு பிரிவு நல்லாட்சி அரசாங்கத்துக்கு 2018இல் தெரிவித்திருந்தது.

அதனை அந்த அரசாங்கத்தில் இருந்தவர்கள் மேற்கொள்ளவில்லை. அதனால் இந்த தாக்குதலின் முழுப் பொறுப்பையும் நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார்.

இதன்போது எழுந்த எதிர்க்கட்சி உறுப்பினர் ரன்ஜித் மத்தும பண்டார, சஹ்ரானுக்கு எதிராக பகிரங்க பிடியாணையை நாங்கள் தன் பெற்றுக்கொண்டிருந்தோம்.

அந்த பிடியாணையை இவர்கள்தான் நிறுத்தினார்கள். இந்த தாக்குதலின் சதிகாரர்கள் இந்த அரசாங்கத்தில் இருப்பவர்களாகும். இதனை பகிரங்கமாக தெரிவிக்கின்றோம் என்றார்.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.