தமிழ் நாடு சட்டமன்ற தேர்தல் 2021: பா.ஜ.க வானதியிடம் தோல்வியுற்ற உலக நாயகன் கமல்ஹாசன்!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தல் 2021: பா.ஜ.க வானதியிடம் தோல்வியுற்ற உலக நாயகன் கமல்ஹாசன்!

இந்திய நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான திரு. கமல்ஹாசன் தனது முதல் தேர்தலில் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க தேசிய மகளிர் பிரிவுத் தலைவர் வானதி ஶ்ரீநிவாசனிடம் தோல்வியை தழுவியுள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் நீண்ட நேர இழுபறிக்குப் பிறகு வானதி 53,209 வாக்குகளையும், கமல் 51,481 வாக்குகளையும் பெற்றனர்.

தி.மு.க கூட்டணயில் களத்தில் இறங்கிய காங்கிரசின் தமிழ்நாட்டு தலைவர் மயூரா ஜெயக்குமார் 41,426 வாக்குகளைப் பெற்றார்.

தொடர்ந்து முன்னிலையில் இருந்த கமல்ஹாசன் இறுதிகட்டத்தை நெருங்கும்போது பின்னடைவைச் சந்தித்தார். வானதி ஸ்ரீனிவாசன் முன்னிலையை எட்டிய அவர், 26-வது சுற்று முடிவில் வெற்றி பெற்றார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கமல்ஹாசன் தோல்வியைத் தழுவினார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post