உலகின் முதல் கர்ப்பிணி மம்மி கண்டுபிடிப்பு!

உலகின் முதல் கர்ப்பிணி மம்மி கண்டுபிடிப்பு!


போலந்து நாட்டில் 20 வயதுடைய கர்ப்பிணி மம்மி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மம்மியை முதலாவது கர்ப்பிணி மம்மியாகவும் கருதப்படுகிறது.


19 ஆம் நூற்றாண்டில் போலந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட மம்மியை ஆராச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர்.


இது ஒரு பாதிரியார் மம்மி என உடல் வாகுவை வைத்து கணித்தனர் ஆராய்ச்சியாளர்கள், ஆனால் அவர்களுக்கு பேரதிர்ச்சியாக இது ஒரு பெண் கர்ப்பிணி மம்மியாக அமைந்திருந்தது.


மேலும் அந்த மம்மிக்கு 20 வயதாக இருக்கலாம் என்றும், அதன் வயிற்றில் 26 முதல் 28 வார சிசு உருவாக்கி இருந்ததாகவும் ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.


இதன் மூலம் உலகில் கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகளில் இது பாதுகாக்கப்பட்ட கர்ப்பிணி மம்மி என ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post