மேலும் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதி!

மேலும் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நுவன் கபில அதுகோரல கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.

இவர் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவானவர் என்றும். மூன்றாவது கொரோனா அலையின் போது தொற்றுக்கு இலக்கான ஐந்தாவது பாராளுமன்ற உறுப்பினர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரம், ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், நலின் பண்டார மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் தொற்றுக்கு இலக்காகினர்.

மேற்குறிப்பிட்ட நால்வரும் குணமடைந்து தனைமைப்படுத்தலில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கப்படுகின்றன. (யாழ் நியூஸ்)

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.