இலங்கை லெஜன்ட்ஸ் அணி மற்றும் தேசிய அணிக்கு இடையில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்த போட்டி ஒத்திவைப்பு!

இலங்கை லெஜன்ட்ஸ் அணி மற்றும் தேசிய அணிக்கு இடையில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்த போட்டி ஒத்திவைப்பு!


இலங்கை லெஜன்ட்ஸ் அணி மற்றும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு இடையில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்த டி20 கிரிக்கெட் போட்டியை ஒத்திவைக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

நாட்டில் நிலவும் கொரொனா நிலைமைக்கு மத்தியில் வீரர்களின் சுகாதார பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 04 ஆம் திகதி இடம்பெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் உபுல் தரங்க கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளாத தெரிய வந்துள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post