![]() |
முன் தோற்றம் |
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹ்...
அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேசத்தில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழும் ஜலால்தீன் சதுக்க பகுதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் பஹ்ரியா எனும் இப் பள்ளிவாயலானது 1992 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட ஒன்றாகும்.
அன்று தொடக்கம் இன்று வரை இப் பள்ளிவாயலின் தோற்றதில் எவ்வித மாற்றமும் செய்யாமல் அவ்வாறே உள்ளது. 2004 டிசெம்பர் மாதம் ஏற்பட்ட ஆழிப் பேரலையான சுனாமியையும் இப் பள்ளிவாயல் சந்தித்துள்ளது.
தற்பொழுது இப் பள்ளிவாயலின் சுவர்கள் மற்றும் மேற்பகுதிகளில் வெடிப்புகள் உருவாகி காணப்படுவதால் இப் பள்ளிவாயலை மேலும் சிறப்பித்து நிர்மாணிக்க பள்ளிவாயல் நிர்வாகத்தினர் முடிவு செய்து, அதற்கான முதற்கட்ட வேலையாக கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி பள்ளிவாயல் இமாம் மற்றும் பிரதேச மக்களின் பங்குபற்றுதலுடன் அடிக்கல் நாட்டும் நிகழ்வையும் செய்து முடித்துள்ளனர்.
அடுத்த கட்டமாக இக் குறித்த புதிய பள்ளிவாயலை நிர்மாணிக்க பிரதேச மக்களிடமும், பல்வேறு பக்கங்களிலும் நிதி உதவி கோரப்பட்டு சில உதவிகள் கிடைத்த போதிலும் கட்டுமான பணிக்கு போதாத காரணத்தினால் இன்னும் உதவிகள் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவே, நிலையான தர்மம் ஒன்றை செய்ய நினைப்பவர்கள் தங்களால் ஆன உதவிகளை இறைவனுக்காக இஹ்லாஸ் எனும் தூய எண்ணத்துடன் இப்பள்ளிவாயலின் நிர்மாணப் பணிக்காக தந்துதவுமாறு தயவாய் வேண்டுகிறோம்.
குறிப்பு: தங்களது உதவிகளை கல், மண், சீமெந்து ஆகிய பொருட்களின் மூலமாகவும் தரலாம். அல்லது கீழ் காணும் வங்கிக் கணக்கிற்கு வைப்பிடலாம்.
அல்லாஹ்வுடைய வழியில் தங்கள் பொருள்களைச் செலவழிப்போர்களின் செலவுக்கு உவமானம், ஒரு தானிய விதையைப் பயிரிடுவது போன்றதாகும். அதிலிருந்து ஏழு கதிர்கள் முளைக்கின்றன! ஒவ்வொரு கதிரும் நூறு தானிய மணிகளைக் கொண்டுள்ளது. இவ்வாறு அல்லாஹ் தான் நாடுவோருக்கு அவர்களுடைய நற்செயல்களின் பயன்களை பன் மடங்காக்குகின்றான். மேலும் அல்லாஹ் அதிகமதிகம் வழங்குபவனும், யாவற்றையும் நன்கு அறிபவனுமாய் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 2:261)
"அல்லாஹ்வுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தனது நிழலை ஏழு பேருக்கு அளிக்கிறான். அவர்கள்: நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வுடைய வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளிவாசல்களுடன் தமது உள்ளத்தைத் தொடர்புபடுத்திக் கொண்ட ஒரு மனிதர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகின்ற இரு நண்பர்கள், உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கின்ற போது "நான் அல்லாஹ்வை அஞ்சுகின்றேன்’ என்று சொல்லும் மனிதர், தம்முடைய வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாக தர்மம் செய்பவர், தனிமையில் அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர் ஆகியோர் ஆவர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்
நூல்: புகாரி 660, 1423
(இரகசிய ஸதகாக்களும் ஏற்றுக் கொள்ளப்படும்.)
வங்கி கணக்கு இலக்கம்:
AC Name: Al Bahriya Masjith
AC No: 113061000782
Sampath Bank
தொடர்புகளுக்கு: 0714466912 / 0768543612
மேலதிக விபரங்களுக்கு:
AGM. முஸம்மத்
தலைவர்
அல்-பஹ்ரியா மஸ்ஜித்,
பொத்துவில் 04.
(இச் செய்தியை SHARE செய்வதன் மூலமும் இப்பளிவாயலின் நிர்மாணப் பணிக்கு உதவி செய்யுங்கள்)
தகவல்: முஹம்மட் இஜாஸ் - மஹல்லாவாசி
![]() |
அடிக்கல் நாட்டும் வைபவத்தின் போது. |




![]() |
புதிய பள்ளிவாயலுக்கான தோற்ற வரைபடம். |