காரைதீவில் சுற்றிவளைத்து அண்டிஜென் பரிசோதனை! ஒருவர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டார்.

காரைதீவில் சுற்றிவளைத்து அண்டிஜென் பரிசோதனை! ஒருவர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டார்.


காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இன்று மேற்கொண்ட 75 பேருக்கான அண்டிஜென் பரிசோதனையின் பெறுபேறுகளில் ஒருவர் மட்டும் தொற்றுள்ளவராக அடையாளம் காணப்பட்டதுடன் ஏனைய அனைத்து பரிசோதனை முடிவுகளும் நெகட்டிவாக வந்துள்ளது என்று காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் தெரிவித்தார். 


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க  சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வஸீர் அவர்களின் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர், சம்மாந்துறை பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் மற்றும் கொரோனோ ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எம்.எச்.எம். ஹசீப் தலைமையிலான சம்மாந்துறை பொலிஸார், பாதுகாப்பு படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு அண்டிஜென் பரிசோதனையின் போதே இந்த பொறுபேறுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.


வீதியில் உலாவித்திரிந்தோர், சமூக இடைவெளியை பின்பற்றாதோர், சுகாதார நடைமுறைகளைப் பேனாதோர், மீனவர்கள் என பலருக்கும் மேற்கொண்ட இந்த பரிசோதனையில் ஒரு இளைஞர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டார். அவருக்கு தொற்றுள்ளதை உறுதிப்படுத்தியதை அடுத்து தொற்றாளரின் குடும்பத்தினருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் குடும்பத்தினருக்கு தொற்றில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


நூருள் ஹுதா உமர்Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.