இலங்கையின் வாட்ஸாப் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

இலங்கையின் வாட்ஸாப் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!


வாட்ஸாப் சமூக வலைத்தள பயன்பாட்டின் தனியுரிமை கொள்கைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்காத பயனர்கள் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.


நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாத பயனர்கள் எதிர்வரும் வாரங்களில் தங்கள் கணக்குகளை இழக்க நேரிடும் என்று வாட்ஸாப் அறிவித்துள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.


கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் வாட்ஸாப் நிறுவனம் தமது நிபந்தனைகளை பயனர்களுக்கு முன்வைத்திருந்து. அந்த நிபந்தனைகளுக்கு இணங்காத இலங்கை பயனர்களின் கணக்குகளில் சில தடைகளை விதிப்பதற்கு எதிர்வரும் வாரம் நடவடிக்கை எடுக்கப்படும் என வாட்ஸாப் நிறுவனம் அறிவித்துள்ளது.


உலகில் 5 பில்லியனுக்கும் அதிக எண்ணிக்கையிலான பயனர்கள் வாட்ஸாப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.


வாட்ஸாப் நிறுவனத்தின் கொள்கைகளை ஏற்காதவர்கள் தங்கள் கணக்குகளுக்கு நுழைய முடியாத நிலைமை மற்றும் அழைப்புகளை ஏற்க முடியாத நிலைமை ஏற்படும் எனவும் ஒரு சில நாட்களின் பின்னர் கணக்கு முழுமையாக செயலிழந்து விடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.