கொரோனா உக்கிரம்; ஒரே நாளில் உயிர் பலியாகிய இரட்டையர்கள்!

கொரோனா உக்கிரம்; ஒரே நாளில் உயிர் பலியாகிய இரட்டையர்கள்!


கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த இரட்டை சகோதரர்கள் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - உத்தர பிரதேசத்தை சேர்ந்த ரேமண்ட் ரபேல் - சோஜா தம்பதிக்கு கடந்த 1997-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது.

ஜோப்ரெட் வர்கீஸ் கிரிகோரி மற்றும் ரால்பிரட் ஜார்ஜ் கிரிகோரி என பெயர் கொண்ட அந்த சகோதரர்கள் இருவரும் ஒரே மாதிரியாக கணினி பொறியியல் படித்துவிட்டு, ஐதராபாத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 24ஆம் திகதி ஒரே நாளில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதனை தொடர்ந்து உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரட்டையர்கள் இருவரும் அடுத்தடுத்து ஒரே நாளில் உயிரிழந்தனர்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.