மாவட்டம் முழுவதும் சிவப்பு வளையமாக அடையாளம் காணப்பட்டுள்ள மாவட்டம்!

மாவட்டம் முழுவதும் சிவப்பு வளையமாக அடையாளம் காணப்பட்டுள்ள மாவட்டம்!


மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் சிவப்பு வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொது மக்களை சுகாதார வழிமுறைகளை பின்பற்றி அவதானமாக செயற்படுமாறும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.


நேற்றைய (18) மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 66 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், இரண்டு மரணங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் திடீர் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு காரணமாக மூன்று கிராம சேவையாளர் பிரிவுகள் நேற்று முதல் தனிமைப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


கல்லடி வேலூர்,சின்ன ஊறணி,திருச்செந்தூர் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் இவ்வாறு முடக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளும் தற்போது சிவப்பு வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மூன்றாவது அலையில் 533 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


கடந்த மாதம் 165 கொரோனா தொற்றாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங்காணப்பட்ட நிலையில் கடந்த வாரத்தில் மட்டும் 250 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.