கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி!

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி!


கூரிய ஆயுதத்தால் 12 வயது சிறுவனொருவனை அயலவர்கள் தாக்கிய   சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் நேற்றைய தினம் (13) பதிவாகியுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாள்குளம் பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வேலியை சீர் செய்வதற்காக சென்ற சிறுவனே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாகவும், கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டமையால் சத்திர சிகிச்சை கூடத்திற்கு அழைத்து சென்று சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் தெரிவித்துள்ளார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் 119 எனும் அவசர அழைப்பிற்கு தகவல் வழங்கப்பட்டும் பொலிசார் விசாரணை மெற்கொள்ள தவறியுள்ளதாகவும், நேற்று காலை 11.00 மணியளவிலேயே அரம்ப விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்த்கது.

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.