பிரவீன் ஜயவிக்ரம - தனது முதல் போட்டியிலேயே பல சாதனைகளை முறியடித்த இளம் பந்து வீச்சாளர்!

பிரவீன் ஜயவிக்ரம - தனது முதல் போட்டியிலேயே பல சாதனைகளை முறியடித்த இளம் பந்து வீச்சாளர்!

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் ஜயவிக்ரம தனது முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பல்லேகலை சர்வதேச கிரிகக்ட் மைதானத்தில் பங்களாதேஷ் அணொக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பிரவீன் ஜயவிக்ரம 178 ஓட்டங்கள் கொடுத்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வேறு எந்த இலங்கை பந்து வீச்சாளர்களும் இதற்கு முன் இதுபோன்ற சாதனை ஒன்றை படைத்திருக்கவில்லை.

தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் இதுபோன்ற திறமையை காட்டிய உலகின் 16 வது பந்து வீச்சாளர் ஆனார் பிரவீன் ஜயவிக்ரம.

மேலும் இடது கை சுழல்பந்து வீச்சாளர் பட்டியலில் 1950களில் அல்ஃப் வெலண்டையின் சாதனையினையும் பிரவீன் ஜயவிக்ரம முறியடித்துள்ளார். அல்ஃப் வெலண்டையிம் தனது முதல் டெஸ்ட் போட்டியில் 204 ஓட்டங்கள் கொடுத்து 11 விக்கட்டுக்களை கைப்பற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 1-0 என்ற அடிப்படையில் தொடரை தனதாக்கிக் கொண்டது.

அகில தனஞ்சய (8/44) தனது முதல் போட்டியில் இலங்கையின் சிறந்த பந்துவீச்சு செயல்திறனை இதற்கு முன் பதிவு செய்திருந்தார். (யாழ் நியூஸ்)

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post