அந்த ஆறு பேரின் இப்தாரில் அடங்கும் ஆயிரம் அர்த்தங்கள்!

அந்த ஆறு பேரின் இப்தாரில் அடங்கும் ஆயிரம் அர்த்தங்கள்!


வழமையாக ரமழான் மாதத்தில் பிரதம மந்திரியின் உத்தியோக பூர்வ வாசஸ்தளத்தில் முஸ்லிம் சமூகத்தை கெளரவிக்கும் நோக்கில் இப்தார் நிகழ்சி நடை பெறுவது வழமை. இம் முறை நாட்டின் அசாதாரண சூழ்நிலை  காரணமாக அவ்வாறு நடை பெறவில்லை. 


எனினும் நாட்டின் அசாதாரணமான சூழ்நிலை காரணமாக பெரியளவில் நடைபெறாமல் சிறியளவில் நடை பெற்றாலும், சமூகத்தின் முக்கிய பிரஜைகள், அல்லது அரசை ஆதரிக்கும் முக்கிய முஸ்லிம் பிரதி நிதிகள்,  அல்து முக்கிய முஸ்லிம்  வெளிநாட்டு ராஜதந்திரிகள், அல்லது முஸ்லிம் முக்கிய கெளரவப் பிரஜைகள் போன்றோர் அழைகப்படாமல், 20 க்கு ஆதரவளித்த ஆறு பேருக்கும் மாத்திரம் இப்தார் நிகழ்ச்சி நடை பெற்றதன் இரகசியம் தான் என்ன ?


வழமையாக இவ்வாறான சமூகம் மற்றும் சன்மார்க்க சம்பந்தமான நிகழ்சிகள் இவ்வாரான முறையில் இவ்வாறான பிரதி நிதிகள், பிரஜைகள் கலந்து சிறப்பித்தது நடைபெறுவது வழக்கம். 


மேலும் இங்கு கலந்து கொண்ட ஆறு பெயர்களில் ஒருவர் தனது குரல் பதிவில் குறிப்பிட்டது போல்,  "சமூக மற்றும் கல்முனை பிரச்சினை சம்பந்தமான பிரச்சினைகளை கதைக்கப் போனதாகவும், அவ்வேலை antigen test results வரும் போது இப்தாருக்கான நேரம் வந்து விட்டது" என பதிவிட்டிருந்தார். அவ்வாறு தான் வைத்துக் கொண்டாலும், சமூக மற்றும் முக்கிய பிரச்சினையான, கல்முனை சம்பந்தமான முக்கிய விடங்களை பேசப்படும் நாட்டின் பிரதம மந்திரியுடனான பேச்சு வார்த்தையில் உங்கள் கட்சின் தலைமைகள் கலந்து கொள்ளாது, மற்றும் முஸ்லிம் சமூகம் சம்பந்தமான இவ்வாறான ஒரு முக்கிய பேச்சு வார்த்தை நடை பெறவுள்ளது என முஸ்லிம் சமூகத்திற்கோ அல்லது Meadia களில் ஏற்கனவே அறிவிக்கப்படாதநிலையிலும், தீடீரென சர்சைக்குரிய ஆறு பேர்கள் மட்டும் கலந்து கொண்டதன் பின்னனி என்ன ?


தலைமைக்குத் தெரியாமல் உறுப்பினர்கள் செயல் பட்டார்கள் என தலைவரும், தலைவரின் ஆசீர்வாதத்துடன் செயல்பட்டோம் என உறுப்பினர்களும்  மாறி மாறி முஸ்லிம் சமூகத்தினை ஏமாற்றும் நிலையிலும், ஒழுக்காற்று நடவடிக்கைக்கு கிழக்கு விரைந்த தலைவர் கொரோனாவை காரணம் காட்டி subject டை close பண்னிய இவர்களின் அத்தனை செயற்பாட்டினையும் முஸ்லிம் சமூகம் சந்தேகத்துடனே பார்க்க வேண்டியுள்ளது.


உண்மையில் ஆறுபேர் கலந்து இந் நிகழ்ச்சியில் இன்னும் சிலரின் பெயர்களை இவர்கள் குறிப்பிட்டிருந்தாலும் அவர்கள் கலந்து கொண்டமைக்கான எந்த தகவலும் வெளிவரவில்லை. 


மேலும் பிரதம மந்திரி அலுவலகம் இது பற்றி எந்த விதமான தகவலையும் வெளியிடாத நிலையில் சர்சைக்குறிய துறைமுக சட்ட மூலத்தை நிறைவேற்ற பாரளுமன்றத்தில் முன்றில் இரண்டு அரசுக்கு தேவைப்படும் நிலையில் இவர்களின் சந்திப்பானது பல துறைகளில் பலவாறு பேசப்படும் போது இவர்களின் இச்சந்திப்பானது தலைவருக்குத் தெரியாமல் உறுப்பினர்கள் செயல் பட்டதும், தலவரின் ஆசீர்வாதத்துன் உறுப்பினர்கள் செயல்பட்டதும் போல் ஆகுமா?


மழை வருவது  முகிளுக்கு தெரியும்,  அதில் மலர்வது மனதுக்கும் தெரியும். 


யார் யாரின் ஆசீர்வாதத்துடன் செயல் பட்டார்கள். பெறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


பேருவலை ஹில்மி 


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.