அதிகபட்ச கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று புதுப்பிப்பு!!

அதிகபட்ச கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று புதுப்பிப்பு!!


இன்றைய தினம் நாட்டில் 1,716 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.


நாளொன்றில் பதிவான அதிகபட்ச தொற்றாளர்கள் எண்ணிக்கை, கடந்த 4 நாட்களாக புதுப்பிக்கப்பட்டு அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


நாட்டில் பதிவான மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 109,845 ஆக உயர்ந்துள்ளது.


இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 503 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 96,478 ஆக அதிகரித்துள்ளது.


இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 678 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post