இந்தியாவில் இருந்து புத்தளம் வந்த இரு பெண்கள் உட்பட குழந்தைகள்! ஒருவர் மாயம்!

இந்தியாவில் இருந்து புத்தளம் வந்த இரு பெண்கள் உட்பட குழந்தைகள்! ஒருவர் மாயம்!


இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் இன்று புத்தளம் வென்னப்புவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு சுகாதார சேவையினரால் தனிமைப்படுத்தப்பட்டார்.


இருப்பினும், அவர்களுடன் வருகைத்தந்த மற்றுமொரு பெண் காணாமல் போயுள்ளதாகவும், தற்போது அந்த பெண்ணை தேடும் பணியில் சுகாதார பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இந்த பெண் நேற்று (30) காலை இந்தியாவின் சென்னை குப்பம் பகுதியில் இருந்து இலங்கைக்கு வந்து புத்தளம் - வென்னப்புவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனது 14 மற்றும் 4 வயதுடைய இரண்டு குழந்தைகளுடன் தலைமறைவாக இருந்தார்.


இது குறித்த செய்திகள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து, பொலிஸாரும் சுகாதார அதிகாரிகளும் அவர்கள் மறைந்திருந்த வீட்டிற்கு சென்று அவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.


மேலும் அந்த பெண் குறிப்பிடுகையில், 


"படகில் எங்களை அழைத்து வந்த இரண்டு இந்தியர்கள் நாங்கள் இந்த வழியில் சென்றால் போக முடியும் என்று சொன்னார்கள்."


மேலும் அந்தப் பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்த ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 26 பேரும் அவர்களது இரண்டு குழந்தைகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post