கண்டி, கொழும்பு உட்பட 17 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!

கண்டி, கொழும்பு உட்பட 17 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!


நாட்டின் 17 மாவட்டங்களில் கடும் இடி மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களில் இரவு வேளையில் 75 மில்லி மீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.


மழை பெய்யும் போது தற்காலிமாக கடுமையான காற்றும் வீசும். அதேநேரம் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, நுவரெலியா, பதுளை, கண்டி, கம்பஹா, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, மாத்தளை, காலி, மொனராகலை, கேகாலை, பொலன்னறுவை ஆகிய 17 மாவட்டங்களில் கடும் இடிமின்னல் தாக்கம் ஏற்படக்கூடும்.


இதனால் மக்கள் திறந்தவெளிகளில் நடமாடுவதை குறைத்துக் கொள்ளுமாறும், இடிமின்னல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளை கையாளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.