நாடு தழுவிய பயணத்தடை விதியை மீறிய குற்றச்சாட்டில் பல நூற்றுக்கணக்கானோர் நேற்றைய தினம் கைது!

நாடு தழுவிய பயணத்தடை விதியை மீறிய குற்றச்சாட்டில் பல நூற்றுக்கணக்கானோர் நேற்றைய தினம் கைது!

இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறியதற்காக இன்று காலை 06 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேரத்தில் 829 நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த ஆண்டு 2020 ஒக்டோபர் 30 ஆம் திகதிக்கு பிறகு ஒரே நாளில் கைது செய்யப்பட்டவர்களில் இதுவே அதிகம் என்று பொலிஸ் செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார், 

மாத்தளையில் 180 பேரும், நிகவரட்டியவில் 79 பேரும், கொழும்பில் 72 பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள நாடு தழுவிய பயண தடையை மீறியதற்காகவே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

2020 ஒக்டோபர் முதல் தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீறியமைக்காக மொத்தமாக 15,590 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று கைது செய்யப்பட்டவர்களில், சிலர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர், மற்றையவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் நபர்கள் மீது குற்றம் சாட்டப்படும் என்று பொலிஸ் செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.