ஐந்து மாவட்டங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஐந்து மாவட்டங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையினை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.

இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, எலப்பாத்த, இரத்தினபுரி, கலவானை, குருவிட்ட, அயகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, யட்டியாந்தோட்டை, தெரணியகலை, வரக்காப்பொல, அரநாயக்க மற்றும் ருவன்வெல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, பாலிந்தநுவர, அகலவத்தை, வலல்லாவிட்ட, மத்துகம, தொடாங்கொட புளத்சிங்கள மற்றும் காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.