நாட்டு மக்களுக்கு இலங்கை இராணுவம் வௌியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

நாட்டு மக்களுக்கு இலங்கை இராணுவம் வௌியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!


கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது ஒரு தேசிய முன்னுரிமையாக கருதி நாடு முழுவதும் அவசரகால வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை பராமரிப்பு நிலைங்களை மேம்படுத்துவதற்கான அவசர பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவம், தேவையான உபகரணங்கள் மற்றும் பாகங்களை வழங்குமாறு எந்த நேரத்திலும் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுக்கவில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது.


எனினும், இந்த முக்கியமான தருணத்தில் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாபெரும் மனிதாபிமான திட்டங்களுக்கு தானாக முன் வந்து உதவி வழங்க விரும்புவோர், கொரோனா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் அல்லது இராணுவ தலைமையகத்தை நேரடியாகத் தொடர்பு கொண்டு வழங்குவது மிகவும் வரவேற்கத்தக்கது.


சில சமூக ஊடகங்களில் ஒரு சிரேஸ்ட அதிகாரியின் பெயர் மற்றும் ஒரு தொலைபேசி எண்ணைக் குறிப்பிட்டு இராணுவம் பொது மக்களிடம் இவ்வாறான கோரிக்கைகளை விடுத்திருப்பதாக தவறான செய்தி பரப்பட்டுள்ளது.


இதற்கு பதில் அளிக்கும் வகையில் இராணுவம் இதனை தெரிவித்துள்ளது.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.