கொரோனா தடுப்பூசிகள் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட நம்பிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தடுப்பூசிகள் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட நம்பிக்கை!


உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் கெப்ரியேசஸ், இலங்கைக்கு தேவைப்படும் 6 இலட்சம் Astra Zeneca தடுப்பூசிகளை பெற்றுக் கொடுக்க முயற்சிப்பார் என எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.


ட்விட்டர் பதிவு ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.


உலக சுகாதார இஸ்தாபனத்தின் தலைவர் உடன் ZOOM தொழிநுட்பம் மூலம் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக ஜனாதிபதி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், இரண்டாவது டோஸை பெற்றுக் கொடுப்பதற்காக உலகளாவிய ரீதியில் 20 மில்லியன் Astra Zeneca தடுப்பூசிக்கான தேவை நிலவுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


குறித்த கலந்துரையாடலின் போது, சீனாவின் Sinopharm தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த இன்னும் 2-3 நாட்களுக்குள் ஒப்புதல் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


அதற்கமைய, தற்போது கையிருப்பில் உள்ள 6 இலட்சம் Sinopharm தடுப்பூசிகளை கொண்டு இலங்கை மக்களுக்கு தடுப்பூசியை செலுத்த முடியும் என ஜனாதிபதி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், கொரோனா முதல் அலையினை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதற்கு தனது பாராட்டுக்களை WHO தலைவர் தெரிவித்தாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


அதேபோல், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிராந்திய மற்றும் கொழும்பு அலுவலகத்தின் பணிகளுக்கு தனது பாராட்டுக்களை பதிவு செய்ததாக ஜனாதிபதி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.