முஸ்லிம் சமூகத்தில் அதிகரித்து வரும் ஜனாஸாக்கள்! -பேருவலை ஹில்மி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முஸ்லிம் சமூகத்தில் அதிகரித்து வரும் ஜனாஸாக்கள்! -பேருவலை ஹில்மி


அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் உறவுகளே ..!


நாடு முடக்கப்பட்ட நிலையிலும் ஒவ்வெரு நாலும் ஜனாஸாக்கள் அதிகரித்து வருவதை அறிய முடிகின்றது. 


இது தொடர்பாக கோவிட் ஜனாஸா சம்பந்தமாக இரவு பகலாக இயங்கும் நம் நல் உள்ளம் படைத்த  சகோதரர்கள் நாலுக்கு நாள் ஜானாஸாக்கள் அதிகரிப்பது பற்றியும், நம் சமூகம் கவனையீனமாக நடந்து கொள்வது பற்றியும் மிகவும் மனவருத்தப்படுகின்றனர்.


நாம் ஓ‌ரிரு ஜனாஸாக்கள் விழுவதை கேள்விப்பட்டாலும், ஒரு ஜனாஸா என்ன குடும்ப நிலையி்ல், எந்த வயதில் வருகின்றது என்ற விபரம் மொத்த ஜனாஸாக்ளை கையாளும் அவர்களுக்கே தெரியும். அவர்களின் ஒரு கவலையான வார்த்தையில் ஆயிரம் பின் அர்த்தங்கள் உள்ளதை நாம் இன்னும் புரியாதுள்ளோம்.


மேலும் தற்போது இந்த ஜனாஸாக்களில் இளம் வயதுடைய வாலிபர்களும் அடங்குவதும் மிகவும் கவலைக்குறிய விடயமாகும். ஒரு குடும்பம் ஒரு வாலிப வயதையுடைய ஒரு மகனை, அல்லது மகளை இழக்குமாக இருந்தால் அந்த குடும்பத்தின் நிலை என்ன? 


மூன்று நான்கு பிள்ளைகள் உள்ள ஒரு குடும்பம் தாயை, அல்லது தந்தையை இழக்கும் போது அந்த குடும்பத்தின் நிலை என்ன? இந்த நிலையை நாம் தொடர விடுவாதா? சமூகத்தை அல்லாஹ் தான் காப்பாற்ற வோண்டும். 


இந்த நிலை தொடர கூடாது. அடுத்த சகோதரனின் குடும்ப ஆபத்திற்கு சில வேலை நமது கவனையீனம் காரணமாக இருக்கலாம். இதை நாம் என் நேரமும் மனதில் கொள்ள வேண்டும். நாட்டு நிலைமையை கருந்தில் கொண்டு, நாம் நம் எதிரில் சந்திக்கும் ஒருவர் ஒரு சில வேலை ஒரு தொற்றாலராக இருக்கலாம் என்ற அவதானத்துடனே செயற்பட வேண்டும். இது தவறில்லை, இதுவே பாதுகாப்பானது.


சம்பவங்களை குறிப்பிட முடியாவிட்டாலும் அண்மையில் சில இடங்களில் சில விடயங்களில் முஸ்லிம் சகோதரர்கள் கவனையீனமாக நடந்து கொண்ட முறைகளை நாம் சமூக வலைத்தள மீடியாக்களில் கண்டோம். இவற்றை பார்கும் போது மிகவும் வேதனையளிக்கிறது.  


இதற்கு மத்தியில் ஒரு தொற்றாலர் இருந்திருந்தால் உந்த ஊர் நிலமை என்ன? (அல்லாஹ் தான் அனைவரையும் காப்பாற்ற வேண்டும்) இதன் பிரகாவது இவ்வாறான தவறுகள் நடக்காமல் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். 


எமது ஒரு சிலரின் கவனையீனம் ஒரு சமூகத்தை, அல்லது ஒரு ஊரை உளைவைக்கலாம். அவைகளில் கலந்து கொள்ளமால் இருப்பதே அந்த ஊருக்கும் அம்மக்களுக்கும்

நாம் செய்யும் கைமாறு என்பதை மறந்தோம். பிரார்தனைகள் எங்கிருந்தும் எப்போதும் செய்யக்கூடியது.


கோவிட் என்ற பேச்சுக்கே இடமில்லாத கொரியா நாட்டில் சீனாவில் இருந்து வந்த ஓரே ஒரு பெண் மூலம் பதினைந்தாயிரம் பேருக்கு கோவிட் பரவிய செய்திகளை நாம் படித்தோம்.  ஏனைய சமூகத்துடனும், முஸ்லிம் சமூகத்தின் உள்ளும் அன்நியோன்னியமாக பழகும் நாம் எவ்வளவு தூரம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை நாம் மறந்தே விட்டோம்.


கவணத்துடன் நடந்து கொள்வேம். நம் குடும்பத்தையும், ஊறையும் உறவுகளையும், சமூகத்தையும் நாட்டையும் பாதுகாப்போம்.


-பேருவலை ஹில்மி


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.