2 கிலோ எடையுடைய கிளேமோர் குண்டுடன் முன்னாள் LTTE கடற்படையில் இருந்த ஒருவர் கைது!

2 கிலோ எடையுடைய கிளேமோர் குண்டுடன் முன்னாள் LTTE கடற்படையில் இருந்த ஒருவர் கைது!


யாழ்ப்பாணத்தின் நாகர்கோவில் பகுதியில் மீன்பிடி துறைமுகம் அருகே புதைக்கப்பட்ட நிலையில் இருந்த  கிளேமோர் குண்டு உள்ளிட்ட வெடிபொருட்களுடன் ஒரு சந்தேக நபரை நேற்று (28) கைது செய்தனர்.


இராணுவ புலனாய்வு வட்டாரங்களின்படி, சந்தேக நபர் முன்னாள் தமிழீழ விடுதலை புலிகளின்  கடற்படையில் இருந்த ஒருவர் எனவும், அவரிடம் இருந்து 02 கிலோ எடையுடைய கிளேமோர் குண்டு ஒன்றும், டி -56 ரக துப்பாக்கிகளுக்கான 14 வெடிமருந்துகள், பிஸ்டல் ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தும் 45 வெடிமருந்துகள், 12.7 ரக வெடிமருந்து 01 மற்றும் வெடிமருந்துகள் மற்றும் 02 மீட்டர் டெட்டனேட்டர் நூல் காணப்பட்டது.


இந்நிலையில், சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாண பொலிஸ் பயங்கரவாத புலனாய்வு பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.