நேற்றைய தினம் பதிவான கொரோனா தொற்றாளர்களில் அதிகளவானோர் கண்டியில்!

நேற்றைய தினம் பதிவான கொரோனா தொற்றாளர்களில் அதிகளவானோர் கண்டியில்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கண்டறியப்பட் 2 ஆயிரத்து 386 கொரோனா நோயாளர்களில் அதிகமானவர்கள் கண்டி மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக 338 நோயாளர்கள் கண்டியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கண்டி நகரப் பகுதியிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளன என்றும் மேலும் இரண்டாவது மிக அதிகமானவை மெனிகின்னா பகுதியிலிருந்து பதிவாகியுள்ளன.

இதேநேரம், கொழும்பில் 227 நோயாளர்களும் கம்பஹாவில் 184 நோயாளர்களும் களுத்துறையில் 321 கொரோனா நோயாளர்களும் பதிவாகியுள்ளன.

அதேபோல, நுவரெலியாவில் 228 நோயாளர்களும் மாத்தறையில் 104 நோயாளர்களும் குருநாகலில் 181 நோயாளர்களும் கண்டறியப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.