பயணத்தடை அமுலில் இருக்க அத்துமீறி வீடு புகுந்து தாக்கிய கும்பல்!

பயணத்தடை அமுலில் இருக்க அத்துமீறி வீடு புகுந்து தாக்கிய கும்பல்!

யாழ்ப்பாணம் புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த கும்பல், வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், வீட்டின் பொருட்களையும் சேதப்படுத்தி தப்பிச் சென்றுள்ளனர்.

மேலும் குறித்த குழுவினர் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியும் மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டி உள்ளிட்டவற்றையும் சேதப்பட்டுத்திச் சென்றுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் பயண தடை அமுலில் உள்ள நிலையில் நேற்று (15) மாலை 6 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

இந்த தாக்குதலில் வீட்டில் இருந்த மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் வீட்டிலிருந்த இளைஞர் ஒருவரின் தங்க சங்கிலி ஒன்றையும் கொள்ளையடித்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 20 க்கும் மேற்பட்டவர்கள் உள்ளடங்கிய குழு மோட்டார் சைக்கிள்களில் வந்து இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.