இன்று முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ள பிரதேசங்கள்!

இன்று முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ள பிரதேசங்கள்!


இன்று (25) அதிகாலை 4.00 மணி முதல் நான்கு மாவட்டங்களின் 06 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக கொரொனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இதேவேளை, தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ள பிரதேசங்கள் பினவருமாறு,


மாத்தளை மாவட்டம்:

கும்புக்கொல்ல கிராம சேவகர் பிரிவின் கலேவெல காவல்துறை பிரிவு


களுத்துறை மாவட்டம்:

யட்டியன தெற்கு கிராம சேவகர் பிரிவு


மாத்தறை மாவட்டம்:

உயன்வத்த கிராம சேவகர் பிரிவு, உயன்வத்த வடக்கு கிராம சேவகர் பிரிவு


இரத்தினபுரி மாவட்டம்:

ரன்வானை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகள்


தொலேகந்த கிராம சேவகர் பிரிவு


ரம்புக்கன்ன கிராம சேவகர் பிரிவு


கத்லான கிராம சேவகர் பிரிவு


தனபெலகிராம சேவகர் பிரிவு


இரத்தினபுரி மாவட்டம்:


கலவான காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகள்


குடுமிடிய கிராம சேவகர் பிரிவு


குடவ கிராம சேவகர் பிரிவு


தெல்கொட தெற்கு கிராம சேவகர் பிரிவு


தெல்கொட மேற்கு கிராம சேவகர் பிரிவு 


தவ்லகம கிராம சேவகர் பிரிவு


தபஸ்ஸகரகந்த கிராம சேவகர் பிரிவு


வேம்பியாகொட கிராம சேவகர் பிரிவு


வத்தாகல்ல கிழக்கு கிராம சேவகர் பிரிவு


வெத்தாகல்ல மேற்கு கிராம சேவகர் பிரிவு  


இதேவேளை, இலங்கையில் மேலும் சில பிரதேசங்கள் இன்று (25) அதிகாலை 4.00 மணி முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், 04 மாவட்டங்களை சேர்ந்த 06 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனடிப்படையில் நுவரெலிய மாவட்டத்தை சேர்ந்த சந்திரிகாமம் தோட்டத்தின் NLDB விலங்குப் பண்ணை, சந்திரிகாமம் தோட்டத்தின் சந்திரிகாமம் பிரிவு ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.