நாளை பணிபுறக்கணிப்பில் ஈடுபட பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானம்!

நாளை பணிபுறக்கணிப்பில் ஈடுபட பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானம்!


சுகாதார துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தடுப்பூசியை வழங்குவது குறித்து அடுத்த 12 மணித்தியாலத்திற்குள் அரசாங்கம் அறிவிக்காவிட்டால் தடுப்பூசி வழங்கும் நிலையங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் நாளை (25) உதவிகளை வழங்கமாட்டார்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என உபுல் ரோகண தெரிவித்துள்ளார்.


சுகாதார பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தவர்களிற்கு கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்குவது குறித்த அறிவிப்பை அரசாங்கம் வெளியிடாவிட்டால் நாளை பொது சுகாதார பணியாளர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவார்கள் என சங்கத்தின் தலைவர் உபுல் ரோகண தெரிவித்துள்ளார்.


சுகாதார அமைச்சு நேற்று அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர் ஒருவரின் குடும்ப உறுப்பினர்களை மேல் மாகாணத்தில் தடுப்பூசி வழங்குவதற்காக அழைத்துள்ளதாக தனக்கு தெரியவந்ததாக உபுல் ரோகாண தெரிவித்துள்ளார்.


நான் உடனடியாக நேற்றிரவு உடனடியாக சுகாதார அமைச்சின் செயலாளரை தொடர்புகொண்டேன் என தெரிவித்துள்ள அவர் கொரோனா வைரசிற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்கள் தங்களால் குடும்ப உறுப்பினர்களிற்கு கொரோனாதொற்றிவிடும் என்ற அச்சம் காரணமாக வீடுகளிற்கு செல்லாத நிலையில் இவ்வாறு அரசமருத்துவ அதிகாரிகள் சங்க உறுப்பினர்களின் குடும்பத்தினரிற்கு மாத்திரம் தடுப்பூசியை வழங்குவது நியாயமற்றது என தெரிவித்துள்ளார்.


தடுப்பூசியை வழங்குவதன் மூலம் அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் முயல்வதையும் அவர் கண்டித்துள்ளார்.


சுகாதாரத்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தடுப்பூசியை வழங்குவது குறித்து அடுத்த 12 மணித்தியாலத்திற்குள் அரசாங்கம் அறிவிக்காவிட்டால் தடுப்பூசி வழங்கும் நிலையங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் நாளை உதவிகளை வழங்க மாட்டார்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என உபுல் ரோகண தெரிவித்துள்ளார்.


-தினக்குரல்


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.