
புத்தளம் கருவலகஸ்வெவ பிரதேசத்தில் 03 மாதக் கைக்குழந்தையொன்று கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருக்கின்றது.
கருவலகஸ்வெவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் இந்த தகவலை வெளியிட்டது.
சிசுவின் தாய் மற்றும் குடும்பத்தினர் அண்மையில் புத்தாண்டு விடுமுறைக் காலத்தில் கொழும்பிலுள்ள உறவினர்களது வீட்டிற்கு சென்றுவந்திருப்பது தெரியவந்துள்ளது.