
அவசியம் ஏற்பட்டால் நாட்டை முழுமையாக முடக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கொரோனா ஒழிப்பு பற்றிய இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இன்று (07) நடந்த ஊடக சந்திப்பில் பேசியபோது அவர் இதனைக் கூறினார்.
அவசியமான தருணத்தில் கொரோனா அச்சுறுத்தல் ஏற்படுகின்ற பிரதேசங்களை மாத்திரம் முடக்கம் செய்துவருவதாக அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்பட்டவர்கள் பரிசோதனையின் முடிவு வெளிவரும் வரை வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.