மீண்டும் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படுமா?

மீண்டும் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படுமா?

நாடுமுழுவதும் போக்குவரத்து கட்டுப்பாடு காரணமாக இன்று வியாழக்கிழமை இரவு 11 மணி முதல் வரும் மே 17ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை பேருந்து சேவைகள் நடைபெறாது என இலங்கை போக்குவரத்து சபையின் உதவிப் பொது முகாமையாளர் தவானா பாண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலம் கருத்துத் தெரிவிக்கையில்,

நாளை ஒரு விடுமுறை நாளாக இருக்கும் என்றும், பயணம் தடைசெய்யப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு போக்குவரத்து தேவையில்லை. எனவேதான குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும், அத்தியாவசிய கடமைகளைச் செய்ய வரும் சுகாதார மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் தங்கள் தேவைகளின் அடிப்படையில் கோரிக்கை விடுத்தால், அவர்களுக்கு பேருந்து சேவைகள் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.