மேல் மாகாணத்திற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் வாகனங்களை பரிசோதிக்கும் நடவடிக்கைகளில் தீவிரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேல் மாகாணத்திற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் வாகனங்களை பரிசோதிக்கும் நடவடிக்கைகளில் தீவிரம்!


நேற்றைய தினம் (10) மேல் மாகாணத்திற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் வாகனங்களை பரிசோதனை செய்யும் சிறப்பு தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது மேல் மாகாணத்திற்குள் நுழைந்த மற்றும் வெளியேறிய 578 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சுமார் 1512 பயணிகள் பரிசோதிக்கப்பட்டதுடன், தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறியதாக 275 பேரை பொலிஸார் எச்சரித்தும் உள்ளனர்.

மேலும், மேல் மாகாணத்தினுள் இயங்கிய பொது போக்குவரத்து சேவைகளையும் பொலிஸார் பரிசோதித்தனர். 

இந்த நடவடிக்கையின் போது 611 பேருந்துகள், 17 ரயில்கள், 564 கார்கள், 1421 முச்சக்கர வண்டிகள் மற்றும் மற்றஒய 775 வாகனங்களும் பரிசோதிக்கப்பட்டன.

சுகாதார வழிகாட்டுதல்களை மீறியதற்காக மொத்தமாக 92 பேர் கைது செய்யப்பட்டதுடன், 4702 நபர்கள் சட்டங்கள் புறக்கணித்ததற்காக பொலிசார் எச்சரித்துமுள்ளனர்.

மேலும், பொது போக்குவரத்தில் ஈடுபடுவோருக்கு பொலிஸார் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

சிறப்பு தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கை இன்றும் தொடரும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேல் மாகாணத்தில் பொது இடங்களில் இயங்கும் நடமாடும் விற்பனையாளர்களை பரிசோதனை செய்ய பொலிஸார் சிறப்பு தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கையையும் நடத்தினர்.

120 நடமாடும் விற்பனையாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா என்று கண்காணிக்க நேற்று பரிசோதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.