கீரை பறிக்க சென்ற தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக பலி!

கீரை பறிக்க சென்ற தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக பலி!


சீரற்ற வானிலையின் போது கீரை பறிக்க சென்ற தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ள சம்பம் ஒன்று நேற்று முன்தினம் (03) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


கட்டான, ஹல்பே, அம்பலயாய பிரதேசத்தில் தாய் ஒருவர் இரண்டு பிள்ளைகளுடன் நேற்று கன மழை பெய்துக் கொண்டிருந்த போது கீரை பறிப்பதற்காக மா ஓயாவிற்கு சென்றுள்ளார்.


இதன்போது, குறித்த மூவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 41 வயதுடைய தாய் மற்றும் அவரது 09 வயது பெண் குழந்தை மற்றும் உறவினர் ஒருவருடைய 08 வயதுடைய ஆண் குழந்தை ஆகியோர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


உயிரிழந்தவர்களின் சடலங்கள் கைவிடப்பட்டிருந்த களிமண் குழி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சடலங்கள் நீர்க்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.