தொற்றாளர்களை அடையாளம் காணும் நடவடிக்கை கையை மீறி சென்று கொண்டிருக்கின்றது! -இலங்கை மருத்துவ சங்கம்

தொற்றாளர்களை அடையாளம் காணும் நடவடிக்கை கையை மீறி சென்று கொண்டிருக்கின்றது! -இலங்கை மருத்துவ சங்கம்


கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் அடையாளம் காணமுடியாத நிலை உருவாகி வருகின்றது என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் பத்மா குணரட்ண தெரிவித்துள்ளார்.


நோயாளர்களை அடையாளம் காணும் நடவடிக்கை கையை மீறிசென்றுகொண்டிருக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்காக அதிகாரிகள் ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


நாளொன்றிற்கு1800 நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர் என்றால் அதனை விட நான்கு மடங்கு அதிகமான நோயாளிகள் அடையாளம் காணப்படாமல் சமூகத்தில் உள்ளனர் என்பது அர்த்தம் என அவர் தெரிவித்துள்ளார்.


கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது கட்டில்கள் மற்றும்; தீவிரகிசிச்சை பிரிவு வசதிகளிற்கு பற்றாக்குறை ஏற்படப்போகின்றது என தெரிவித்துள்ள அவர் மருத்துவமனைகள் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டன என தெரிவித்துள்ளார்.


இதன்காரணமாக சில நோயாளர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post