மிருகங்களையும் விட்டுவைக்காத கொரோனா! 8 சிங்கங்களுக்கு தொற்று உறுதி!

மிருகங்களையும் விட்டுவைக்காத கொரோனா! 8 சிங்கங்களுக்கு தொற்று உறுதி!


இந்தியாவின் 2ஆவது கட்ட கொரோனா தொற்று மக்களை வாட்டி வதைக்கும் நிலையில், மிருகங்களையும் விட்டுவைக்கவில்லை.


இந்நிலையில் ஹைதராபாத் நேரு உயிரியல் பூங்காவில் உள்ள மிருகங்களுக்கும் கொரோனா தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. அங்கு 08 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


சிங்கங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், RT-PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் குறித்த சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.


இதனால் சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதன் உடல்நிலை கண்காணிப்பட்டு வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.