இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா பரவல் வேகம் - தெற்காசியாவில் இரண்டாம் இடம்!

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா பரவல் வேகம் - தெற்காசியாவில் இரண்டாம் இடம்!

இலங்கையில் கொரோனா பரவல் வேகம் கடந்த ஒரு வார காலப்பகுதியில் 82 வீதமாக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

தினமும் கொரோனா தொற்று குறித்து பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளும் பிரபல Worldometers இணையத்தளத்தின் புதிய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது நேபாளத்திலேயே அதிக கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன் அதிகரிப்பு 105 வீதமாகும்.

அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் இந்தியாவில் கோவிட் பரவலின் வேகம், அந்த நாட்டு மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது 11 வீதமாகும். அது தெற்காசியாவில் குறைந்த நோயாளர்களின் வீதமாகும்.

அதற்கமைய இந்த பட்டியலில் முதலாது இடத்தை நேபாளமும், இரண்டாவது இடத்தில் இலங்கையும் மூன்றாவது இடத்தில் மாலைத்தீவும் பதிவாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.