கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் கண் பார்வையை இழக்கும் அபாயம்! - வெளியான திடுக்கிடும் தகவல்!

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் கண் பார்வையை இழக்கும் அபாயம்! - வெளியான திடுக்கிடும் தகவல்!

இந்தியாவுக்கு கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் தாக்கம் நாட்டில் சமாளிக்க முடியாத பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நோய்த்தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் குஜராத்தில் கொரோனா சிகிச்சையில் குணம் அடைந்தவர்களை மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பங்கஸ் வேகமாக தாக்கி வருகிறது.

இந்த நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களின் கண்ணை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத், சூரத் உள்ளிட்ட நகரங்களில் இந்த நோய் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 80 பேர் கருப்பு பங்கஸ் நோய் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

இவர்கள், நீரழிவு நோய் மற்றும் ரத்த புற்றுநோயோடு கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பின் போது அதிக அளவு மருந்துகளை உட்கொண்டதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கருப்பு பங்கஸ் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.