விபத்தில் சிக்கிய சுமந்திரன்; விசாரணைகள் ஏதுமின்றி செல்ல உதவிய பிரதமர் மஹிந்த?

விபத்தில் சிக்கிய சுமந்திரன்; விசாரணைகள் ஏதுமின்றி செல்ல உதவிய பிரதமர் மஹிந்த?


கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் விபத்தில் சிக்கியபோது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே அவரை அங்கிருந்து விசாரணைகள் ஏதுமின்றி மட்டக்களப்பிற்கு புறப்பட வழிசெய்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.


கொம்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்றுகொண்டிருந்த சுமந்திரனின் வாகனம் நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியது.


பொலிஸார் விரைந்து விசாரணைகளை நடத்தியபோது, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி குறித்த வழக்கிற்கு ஆஜராவதற்காக செல்ல வேண்டும் என்பதால் பொலிஸாரிடம் விளக்கம் தெரிவித்த போதிலும் பொலிஸார் அங்கிருந்து புறப்பட அனுமதிக்கவில்லை.


இந்த சந்தர்ப்பத்தில் சுமந்திரன் எம்.பி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அருகிலுள்ள ஊடகவியலாளர் ஒருவருடன் விபரத்தைக்கூற, பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.


உடனடியாக பிரதமர் மஹிந்த, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மூலமாக இந்த பிரச்சினையை முடிவுக்குகொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post