அரசு விதித்த பயணக்கட்டுப்பாடுகளை மீறி சுற்றுலா சென்ற அமைச்சரின் மகளை அட்டை கடித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

அரசு விதித்த பயணக்கட்டுப்பாடுகளை மீறி சுற்றுலா சென்ற அமைச்சரின் மகளை அட்டை கடித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!


அரசினால் அறிவிக்கப்பட்ட சுகாதார வழிமுறைகளை மீறி இவ்வார இறுதியில் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற அமைச்சரவை அமைச்சர் ஒருவரின் மகளை அட்டை கடித்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.


குறித்த அமைச்சரின் மகள் ஒரு குடும்ப பயணத்தில் மாத்தளை பகுதியில் அமைந்துள்ள ஓர் பங்களாவுக்கே இவ்வாறு சென்றிருந்தனர். அதன்போது அவரை அட்டை கடித்ததில் தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அரசாங்கம் நேற்று (14) முதல் திங்கள் வரை பயணக் கட்டுப்பாடுகளை அறிவித்தது. இந்நிலையில் விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாடுகளை மீறியே இவர்கள் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் குறித்த அமைச்சரும் குடும்ப பயணத்துடன் இணைந்தாரா என்பது குறித்து இதுவரை தகவல் வெளிப்படவில்லை, ஆனால் அவரது மகளை அவரது VIP பாதுகாப்பு அதிகாரிகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் என்று தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன. (யாழ் நியூஸ்)


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.