ரிஷாடை எனக்கு நன்றாக தெரியும்! அவர் ஒரு இறை பக்தியுள்ள முஸ்லிம், அவர் ஒருபோதும் தீவிரவாத்தில் ஈடுபடமாட்டார்! -மங்கள

ரிஷாடை எனக்கு நன்றாக தெரியும்! அவர் ஒரு இறை பக்தியுள்ள முஸ்லிம், அவர் ஒருபோதும் தீவிரவாத்தில் ஈடுபடமாட்டார்! -மங்கள


அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதுர்தீன் ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு இன்றுடன் (24) ஒரு மாதமாகின்றது.


இருவரும் ஏப்ரல் 24, 2021 காலை, 2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலை குண்டுதாரிகளுக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.


இருப்பினும், இருவரையும் இதுவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை, நீதிமன்றம் அல்லது சட்டமா அதிபருடன் கலந்தாலோசிக்காமல் நிர்வாக மற்றும் அரசியல் காரணங்களுக்காக ரிஷாட் பதியுதீனை அரசாங்கம் தடுத்து வைத்திருப்பதாக சட்டத்தரனி ருஷ்டி ஹபீப் குற்றம் சாட்டியுள்ளார்.


முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இன்று (24) அவரது ட்விட்டர் தளத்தில் இவ்வாறு பதிவிட்டிருந்தார்,


"பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டு இன்றுடன் 30 நாட்கள் ஆகின்றன. 90 களில் இருந்து இலங்கை சுதந்திரக் கட்சியின் இளம் உறுப்பினராக ரிஷாட் பதியுதீனை நான் அறிந்திருக்கிறேன். அவர் ஒரு இறை பக்தியுள்ள முஸ்லிம், அவர் ஒருபோதும் தீவிரவாத்தில் ஈடுபடமாட்டார் திறமையற்ற நிர்வாகத்திலிருந்து கவனத்தை திசை திருப்ப இலங்கை தவறியதற்கு ரிஷாத் பதியுதீன் இரையாக்கப்பட்டுள்ளார்" எனத் தெரிவித்திருந்தார்.கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.