பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் பயணிக்க தனது கையொப்பமிட்ட அனுமதிப்பத்திரம் வழங்கி வைத்த அலி சப்ரி!

பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் பயணிக்க தனது கையொப்பமிட்ட அனுமதிப்பத்திரம் வழங்கி வைத்த அலி சப்ரி!

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தனது தேர்தல் தொகுதி மக்களுக்கு பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட தினங்களின் போது பயணிக்க தனது கையொப்பமிட்ட அனுமதிபத்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுபோன்ற அனுமதிகளைப் பெற்ற நபர்கள் கடந்த தினங்களில் மாவட்ட எல்லைகளை கடந்து சென்றுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளுக்காகவே அவர் இவ்வாறு அனுமதிகள் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் சந்தர்ப்பங்களில் அத்தியாவசிய சேவைகளுக்கான பயண அனுமதி வழங்கும் அனுமதி, மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் இல் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்ததோடு மற்றும் சமீபத்தில் கொழும்பு துறைமுக நகர (Colombo Port City) வாக்களிப்பின் போது அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்ததும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.