போலி அமெரிக்க டொலர்கள்; போலி நாணயத்தாள் விசாரணை பணியகம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

போலி அமெரிக்க டொலர்கள்; போலி நாணயத்தாள் விசாரணை பணியகம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை!


போலி அமெரிக்க டொலர்கள் அச்சிடப்பட்டுள்ள மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.


இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 08 பேர் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் போலி நாணயத்தாள் விசாரணை பணியகத்தின் ஊடாக கடந்த 02 மாத காலப்பகுதியில் கந்தளாய் மற்றும் அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.


அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, இலங்கை ரூபாவிற்கு மேலதிகமாக அமெரிக்க டொலர்களும் அச்சிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.


எனவே இவ்வாறு அச்சிடப்பட்டுள்ள போலி அமெரிக்க டொலர்கள், நாணய மாற்றும் நிலையங்களுடனும், நிதி நிறுவனங்களிலும் பரிமாற்றப்படலாம் என குற்றப்புலனாய்வு திணைக்களம் எச்சரித்துள்ளது.


எனவே இது போன்ற தகவல்கள் அறிந்தால் அறிவிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் போலி நாணயத்தாள் விசாரணை பணியகம் பொது மக்களிடம் கோரியுள்ளது.


0112326670 அல்லது 0112320145 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து அது குறித்த தகவல்களை வழங்க முடியும்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.