கொரோனா தொற்று அற்ற நிலையில் மரணிப்பார்களாயின், அந்த மரணத்தின் இறுதி சடங்கில் 15 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன அறிவித்துள்ளார்.
24 மணிநேரத்துக்குள் இறுதி கிரியையை செய்துவிட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.