சஜித் பிரேமதாச மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று!

சஜித் பிரேமதாச மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று!

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது மனைவி ஆகியோர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் (22) கொரோனா அறிகுறிகளுடன் எதிர்க்கட்சி தலைவரின் மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்பு, கொரோனா தொற்றுக்கு இலக்கானது உறுதி செய்யப்பட்டது. 

சுகாதார வழிமுறைக்கமைவாக எதிர்க்கட்சித் தலைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டதும், அவரும் தொற்றுக்கு இலக்கானது தெரிய வந்தது. 

அவரது மனைவிக்கு மாத்திரமே அறிகுறிகள் இருந்ததாகவும், சஜித் பிரேமதாசவுக்கு எந்தவித அறிகுறிகளும் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)

“கைகளை சரிவர கழுவுவோம் - பாதுகாப்பாக இருப்போம்”

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.