இனவாத ஊடகங்கள் பலஸ்தீன வரலாற்றை மாற்றி அமைக்கின்றன!

இனவாத ஊடகங்கள் பலஸ்தீன வரலாற்றை மாற்றி அமைக்கின்றன!


பலஸ்தீன மக்கள் தம்மை பாதுகாக்க எதிர்த்து தாக்குவதை தீவரவாதமாகவும், வேண்டுமென்றே அப்பாவி பலஸ்தீன மக்களை ஏவுகனைகள், குண்டுகளால் மிலேச்சத்தனமாக கொலைசெய்யும் இஸ்ரேல் யூதர்களை தற்காப்புக்காக தாக்குவதாகவும் மேற்கத்திய ஊடகங்கள் செய்திகளை பரப்புகின்றன.

அப்பாவி மக்களை நாளாந்தம் கொலைசெய்பவர்கள் தற்காப்பு என்பதாகவும் பலஸ்தீனர்களை தீவரவாதிகளாகவும் சித்தரிக்கும் ஊடகங்கள் நாசமாகட்டும்.

உண்மைக்கு புறம்பான செய்திகளை மக்களிடையே கொண்டு சென்று அவர்களிடத்தில் அப்பாவி மக்கள் பற்றிய தப்பபிப்பிராயத்தை ஏற்படுத்துவது ஊடக தர்மத்துக்கே இழுக்கு!

இஸ்ரேலில் வீட்டு பணிப்பெண்களாக வேலை செய்யும் நமது நாட்டு மக்களில் சிலரும், மேற்கத்திய நாடுகளில் வாழும் நமது நாட்டு சில ஜென்மங்களும் இஸ்ரேலுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

பலருக்கு பலஸ்தீனத்தின் உண்மையான வரலாறு தெரியவில்லை, மற்றும் சிலர் மாற்று மத சகோதர/ரிகள் நடத்தும் சமூக ஊடகங்களில் வரும் திரிபுபடுத்தப்பட்ட செய்திகளை வைத்து விடயத்தை புரிய முனைகின்றனர். உதாரணமாக ஐஸ்வர்யா மோகன் என்ற பென் தான் வெளியிட்டுள்ள காணொலியில் முழுக்க முழுக்க இஸ்ரேலை ஆதரித்து வரலாறை மறைத்து, திரிபுபடுத்தி, சித்தரித்து ஒருதலைப்பட்சமாக பேசியுள்ளார், இதை பார்க்கும் நம்மவர்கள் யதார்த்தத்தை தலைகீழாக புரிய வாய்ப்புண்டு.

குத்ஸ், பலஸ்தீன பூமி முஸ்லிம்களது சொத்து, நபிமார்களது இடம், எமது முதலாவது கிப்லா, நன்மையை நாடி முஸ்லிம்கள் செல்வதற்கு தகுமான மூன்று இறையில்லங்களுள் ஒன்றான மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்துள்ள தேசம், இறைவன் மஸ்ஜிதுல் அக்ஸாவை சூழ பரகத் செய்யப்பட்ட இடமாக வர்ணித்துள்ளான் போன்ற இன்னோரன்ன சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்ட இடம் மட்டுமல்லாது காலாகாலமாக முஸ்லிம்கள் பூர்வீக குடிகளாக வாழ்ந்து வந்தமைக்கான பல வரலாற்று சுவடுகள், அடையாளங்கள் தெளிவாக உள்ளன.

ஹிட்லரினால் துரத்தியடிக்கப்பட்ட நாடோடிகளான இந்த சியோனிச யூதர்கள் இந்நாட்டில் அடைக்கலம் தேடி வந்த போது பாவம் பார்த்து நமது முஸ்லிம்கள் இடம் கொடுத்து அரவணைத்ததை காலப்போக்கில் மறந்து உண்ட வீட்டுக்கு இருண்டகம் செய்து இடம் தந்த குற்றத்திற்காக சொந்த இடத்தைப் பறித்து, மக்களை கொன்றொழித்து, கட்டிடங்களை தகர்த்து, பொருளாதாரத்தை அடிமட்டத்துக்குள்ளாக்கி பலஸ்தீன நாட்டை குட்டிச்சுவராக்கிய நன்றிகெட்டவர்கள் தான் இந்த வந்தேறிகள்.

அல்லாஹ் அநியாயக்கார சியோனிச யூதர்களை அழித்து முஸ்லிம்களுக்கு விடிவையளித்து வெற்றியைக்கொடுத்து நிம்மதியாக வாழ அருள் புரிவானாக!

-அஸ்ஹான் ஹனீபா

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.