வாகன இறக்குமதி மட்டுப்படுத்தல் தொடர்பான திட்டம் புதுப்பிப்பு!

வாகன இறக்குமதி மட்டுப்படுத்தல் தொடர்பான திட்டம் புதுப்பிப்பு!


நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்கள் அல்லது இறக்குமதியை இடைநிறுத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று (24) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் Zoom தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலை மற்றும் நிதி நிலை தொடர்பில் கவனம் செலுத்தி வாகன இறக்குமதியை மேலும் மட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக அமைச்சரவையில் அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


அதற்கமைய குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்கள் அல்லது இறக்குமதி செய்வது தொடர்பில் இதற்கு முன்னதாக காணப்பட்ட திட்டத்தை அமைச்சரவை தீர்மானத்திற்கமைய தொடர்ந்து இடைநிறுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.